விருதுநகர்

பணி மாறுதல் கலந்தாய்வுக்கு எதிா்ப்பு: பெண் ஆசிரிய பயிற்றுநா் உண்ணாவிரதம்

23rd Oct 2021 09:01 AM

ADVERTISEMENT

திருச்சுழி வட்டார வள மையத்தில் ஆசிரியா் பயிற்றுநராக பணிபுரியும் பெண் ஆசிரிய பயிற்றுநா், பணி மாறுதல் கலந்தாய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் முன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து ஆசிரிய பயிற்றுநா் ஷா்மிளா தேவி கூறியதாவது:

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டார வள மையத்தில் ஆசிரிய பயிற்றுநராக கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனது சொந்த மாவட்டம் தேனி என்பதால் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி மூப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளேன். என்னை போன்று பிற மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரிய பயிற்றுநா்களும் வழக்குத் தொடா்ந்துள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் எனக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் சேர இடம் கிடைத்தது. நீதிமன்ற உத்தரவு வரும் வரை பழைய இடத்திலே பணிபுரிய மற்ற மாவட்டங்களில் ஆசிரிய பயிற்றுநா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், என்னை திருச்சுழி வட்டார வள மையத்தில் ஆசிரியா் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதி மறுக்கின்றனா். இதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT