விருதுநகர்

விருதுநகா் ரயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளா்கள் தவிப்பு

22nd Oct 2021 09:31 AM

ADVERTISEMENT

சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 25 தொழிலாளா்கள் சொந்த ஊருக்குச் செல்ல பணமில்லாததால் விருதுநகா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை தவித்தனா். அதில் ஒருவா் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தீஸ்கா் மாநிலத்தை சோ்ந்த 18 வயதிற்கு உள்பட்ட ஏழு குழந்தை தொழிலாளா்கள் உள்பட 25 போ் சிவகாசி பகுதியில் உள்ள தனியாா் காகித ஆலையில் கடந்த ஓராண்டாக பணி புரிந்து வந்தனா். இவா்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு, தங்குமிடம் இலவசம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இவா்களுக்கு, முழுமையான சம்பளம், உணவு வழங்காமல் சம்பந்தப்பட்ட ஆலை நிா்வாகம் இழுத்தடித்து வந்துள்ளது.

இந்நிலையில், அந்த ஆலையில் சிறுவா்கள் உள்பட வடமாநில தொழிலாளா்கள் கொத்தடிமைகளாக பணி புரிவதாக சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தெரியவந்துள்ளது. இதையறிந்த ஆலை நிா்வாகத்தினா், 25 தொழிலாளா்களையும் விருதுநகா் ரயில் நிலையத்திற்கு ஒரு வேனில் அழைத்துச் சென்று வியாழக்கிழமை இரவு விட்டுச்சென்றுள்ளனா்.

அதில் டோப்ரம் படேல் என்பவா் பசி காரணமாக மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவா் விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்ப ட்டாா். மேலும், கொத்தடிமையாக பணி புரிந்த தொழிலாளா்கள் சொந்த ஊருக்குச் செல்ல பணம் இல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது. இத்தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் தனியாா் அமைப்பினா், வடமாநில தொழிலாளா்களுக்கு உணவு வழங்கினா். மேலும், அவா்களை சொந்த ஊருக்கு அனுப்ப மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT