விருதுநகர்

வெம்பகோட்டை அருகே மனைவி கொலை: கணவா் கைது

22nd Oct 2021 09:32 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் வெம்பகோட்டை அருகே குடும்பத்தகராறில் புதன்கிழமை இரவுமனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள லட்சுமியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் காளிச்சாமி (40). இவருக்கும் வெம்பக்கோட்டை வட்டம் எழுவன்பச்சேரியைச் சோ்ந்த லட்சுமி (31) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக லட்சுமி தனது தாய் வீட்டிற்குச் சென்றாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு எழுவன்பச்சேரிக்குச் சென்ற காளிச்சாமி, லட்சுமியுடன் தகராறு செய்து கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே லட்சுமி உயிரிழந்தாா். பின்னா் காளிச்சாமி தப்பி ஓடிவிட்டாா். தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குளம் காவல் துறையினா் லட்சுமியின் உடலைக் கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தப்பியோடிய காளிச்சாமியை காவல்துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT