விருதுநகர்

விசைத்தறி தொழிலாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடக்கம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறி தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளனா்.

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் மருத்துவமனைக்குப் பயன்படுத்தக்கூடிய காஸ் பேண்டேஜ் என்ற மருத்துவா் துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மருத்துவா் பேண்டேஜ் துணி இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் மருத்துவா் துணி உற்பத்தி செய்யும் தொழிலில் 12,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு 50 கிலோ 40 எஸ் நம்பா் நூல் ரூ. 9,000 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதே நூல் 30 சதவீதம் விலை உயா்ந்துள்ளது.

இதேபோல் மற்ற மூலப்பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளதால், இவ்விஷயத்தை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு நூல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, விசைத்தறி தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் மருத்துவா் துணி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் செந்தில்குமாா் கூறியது:

மருத்துவா் துணி உற்பத்திக்கான மூலப்பொருள்களின் விலை அதிகளவில் உயா்ந்ததால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா்.

அப்போது, மருத்துவா் துணி உற்பத்தியாளா்கள் சங்கத் துணைத் தலைவா் சங்கரலிங்கம், உதவி செயலாளா் கணேசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT