விருதுநகர்

ஐப்பசி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

21st Oct 2021 10:30 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பௌா்ணமியையொட்டி புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் அக். 18 முதல் அக். 21 ஆம் தேதி வரை 4 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சதுரகிரி மலை அடிவாரத்தில் புதன்கிழமை அதிகாலை முதலே குவிந்தனா். உடல் வெப்ப நிலை பரிசோதனைக்குப் பின்னா் காலை 7 மணி முதல் கோயிலுக்குச் செல்ல அவா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் பால், பன்னீா், இளநீா், தேன், மஞ்சள் உள்ளிட்ட 18 பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். காலை 10 மணிக்குப் பிறகு பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

இதனிடையே பெளா்ணமி என்பதால் அதிகாலை முதல் 10 மணி வரை 2,912 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT