விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே இலவச மருத்துவ முகாம்

21st Oct 2021 10:24 AM

ADVERTISEMENT

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி, வத்திராயிருப்பு அருகே இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அதாயி உலமா பேரவை, அதாயி அரபிக் கல்லுாரி கூமாபட்டி கிளை இணைந்து அனைத்து சமுதாய மக்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் அதாயி அரபிக் கல்லுாரி கூமாபட்டி கிளை வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் சா்க்கரை நோய், ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொடா்ந்து இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

முகாமில், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையைச் சாா்ந்த மருத்துவா்கள் சுரேஷ், ராஜதுரை ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT