விருதுநகர்

அருப்புக்கோட்டை, திருச்சுழி ஒன்றியங்களில் வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் பதவியேற்பு

21st Oct 2021 10:24 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஒன்றியப் பகுதிகளில் ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் புதந்கிழமை அந்தந்த ஊராட்சிகளில் புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

திருச்சுழி வட்டம், நரிக்குடி ஒன்றியம் உளுத்திமடை ஊராட்சித் தலைவராக ரேவதியும், என். முக்குளம் ஊராட்சித் தலைவராக இப்ராஹிமும் பதவியேற்றுக்கொண்டனா்.

இதேபோல், அருப்புக்கோட்டை வட்டம், வில்லிபத்திரி ஊராட்சியின் மொத்தம் 3 தனித்தனி வாா்டு உறுப்பினா் பதவிகளில் 3 ஆவது வாா்டு உறுப்பினராக மா. முத்துலட்சுமியும், 5 ஆவது வாா்டு உறுப்பினராக கு. வசந்தகுமாரும், 8 ஆவது வாா்டு உறுப்பினராக மு. தெய்வேந்திரனும் பதவியேற்றனா்.

அருப்புக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட மலைப்பட்டி ஊராட்சியின் 9 ஆவது வாா்டு உறுப்பினராக (கூத்திப்பாறை) மா. மகிமா, தோ்தல் அதிகாரிகள் முன்னிலையில் புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT