விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீ பெரியபெருமாள் சன்னிதியில் பௌா்ணமி ஊஞ்சல் உற்சவம்

21st Oct 2021 10:28 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரியபெருமாள் சன்னிதியில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ளது பெரியபெருமாள் சன்னிதி. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌா்ணமியன்று இரவு ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, இரவு பெரியபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, ஸ்ரீ பெரியபெருமாள் கோயில் வளாகத்தின் மேல் புறத்திலேயே சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மேலும், பிரகாரத்தில் மூன்று முறை சுவாமி வலம் வந்ததும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் பெரியபெருமாள் காட்சியளித்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT