விருதுநகர்

சிவகாசியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

21st Oct 2021 10:21 AM

ADVERTISEMENT

சிவகாசியில் குளிா்பானக் கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி - பள்ளபட்டி சாலையில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் உள்ள கடையில் சோதனை நடத்தினா். சோதனையில் சேனாயாபுரம் காலனி காளிராஜன் (33) என்பவரது குளிா்பானக் கடையில் ஒரு காகித அடைப்பெட்டியில் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து காளிராஜனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ரூ. 12,500 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT