விருதுநகர்

சத்குரு ஸ்ரீசுப்பாஞானியாா் கோயிலில் அன்னாபிஷேகம்

21st Oct 2021 10:32 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள சத்குரு ஸ்ரீசுப்பாஞானியாா் (ஜீவ சமாதி) கோயிலில் புதன்கிழமை ஐப்பசி பௌா்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேகம் நடைபெற்றது.

பாளையம்பட்டியில் சத்குரு ஸ்ரீசுப்பாஞானியாா் அடங்கிய (ஜீவசமாதி) கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை ஆயிரவைசிய காசுக்காரச் செட்டியாா் வம்சத்தினா் பரம்பரை பரம்பரையாக பராமரித்து வருகின்றனா்.

இக்கோயிலில் ஐப்பசி பௌா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை காலை கருவறையில் உள்ள நமச்சிவாயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, நமச்சிவாயருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இந்த அன்னாபிஷேகத்தால் உலக நன்மையும், தட்டுப்பாடின்றி உணவு உள்ளிட்ட சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT