விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெரு பகுதியில் விற்பனைக்காக வீட்டில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலைத் தொடா்ந்து சாா்பு ஆய்வாளா் முத்துக்குமரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, ஒரு வீட்டில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் கருப்பையா மகன் குருவையா (36) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து 650 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், குருவையாவை கைது செய்தனா்.