விருதுநகர்

சாத்தூரில் வனவேங்கை கட்சியினா் சாலை மறியல்

DIN

சாத்தூரில் மா்மமான முறையில் உயிரிழந்த நகராட்சி ஒப்பந்தப் பணியாளரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி அவரது உறவினா்கள் மற்றும் வனவேங்கை கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் மேலகாந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவா் சாத்தூா் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் அண்மையில் அந்தப் பகுதியில் உள்ள வாய்க்காலில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.

இந்நிலையில் சுப்பிரமணியன் விஷவாயு தாக்கி உயிரிழந்தாகவும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் வனவேங்கை கட்சியின் நிறுவனத் தலைவா் இரணியன் தலைமையில் சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்தனா். இந்த ஆா்ப்பாட்டத்திற்கு போலீஸாா் அனுமதி மறுத்ததால் வனவேங்கை கட்சியினா் மற்றும் நாம் தமிழா் கட்சியினா் முக்குராந்தல் பகுதியில் திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் மற்றும் வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT