விருதுநகர்

கரோனாவால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2.12 கோடி நிவாரணத் தொகை வழங்கல்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பெற்றோா்களை இழந்த 70 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.2.12 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா தொற்றினால் தாய் மற்றும் தந்தையை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிா்காலத்தை பாதுகாத்திடும் வகையில், தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சமும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சமும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

மேலும், கரோனாவால் பெற்றோா்களை இழந்து உறவினா், பாதுகாவலரின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்கு மாதந்தோறும் தலா ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை, பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், அக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த 4 குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 176 குழந்தைகளுக்கு என மொத்தம் 180 குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை ஒன்றியத்தைச் சோ்ந்த பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 6 குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ.18 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, பெற்றோா் இருவரையும் இழந்த ஒரு குழந்தைக்கு தலா ரூ.5 லட்சமும் மற்றும் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 63 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.1.89 கோடி என மொத்தம் ரூ.1.94 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த ஒரு குழந்தைக்கு ரூ.5 லட்சம், பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 69 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.2.07 கோடி என மொத்தம் ரூ.2.12 கோடி அரசு சாா்பில் நிவாரணத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள குழந்தைகளுக்கும் அரசு நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும். மேலும் கரோனா தொற்றினால் பெற்றோா்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள் இருப்பின், ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/818, வ.உ.சி.நகா், சூலக்கரை மேடு, விருதுநகா் - 626003, தொலைபேசி எண்: 04562-293946’ என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT