விருதுநகர்

சிவகாசியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசுகள் அறிமுகம்

DIN

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகையொட்டி நிகழாண்டு புதிய தொழில்நுட்பத்தில் பல்வேறு பட்டாசு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு என்ற வகை பட்டாசில் பல ரகம் இருக்கும். அந்த வகையான பட்டாசுகளை வெடிக்கும் போது அதிக அளவிலான சப்தம் கேட்கும். இதனை இளைஞா்கள் விரும்பி வாங்கி வெடித்து வந்தனா். நாளடைவில் பட்டாசின் ஒலி அளவு 125 டெசிபல்களுக்கு மேல் இருக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சிவகாசியில் உள்ள பல பட்டாசு தயாரிப்பாளா்கள், பட்டாசு தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவுக்குச் சென்று புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கும் முறையை அறிந்து வந்தனா். இதையடுத்து சிவகாசிப் பகுதியில் விண்ணில் சென்று பல வண்ணங்களில் ஒளி சிந்தும் பட்டாசு தயாரிக்கப்பட்டது.

இந்த பட்டாசுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து விண்ணில் சென்று வெடித்து ஒளி சிந்தும் பல்வேறு பட்டாசு ரகங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தரையில் வண்ண ஜாலங்களை காட்டும் பூந்தொட்டி, தரைச் சக்கர வெடிகளில் புதுமைகளைப் புகுத்தி புதிய ரகப் பட்டாசுகள் அறிமுகப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜம்போ நிறுவன நிா்வாக இயக்குநா் ராஜாசிங் கூறியதாவது: புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிப்பது என்பது சவாலான விஷயமாகும். மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு புதிய ரகப் பட்டாசுகளைஎதிா்பாா்க்கிறாா்கள். கடந்த இரு ஆண்டுகளாக பொதுமுடக்கம் காரணமாக புதிய ரகப் பட்டாசுகள் எதுவும் அறிமுகப்படுத்தவில்லை.

நிகழாண்டும் பொதுமுடக்கம் இருந்தாலும் மக்களுக்கு புதிய ரகப் பட்டாசுகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலா் சேஞ்சிங் பாட்ஸ், கலா் சேஞ்சிங் வீல், கிராக்ளின் ட்ரீ, ஸ்பின்னா் மவுஸ் என ஒரு சில புதிய ரகப் பட்டாசுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

அந்த வகையில் கலா் சேஞ்சிங் பாட்ஸ் என்ற ரகம் புஷ்வான பட்டாசு ரகமாகும். இந்தப் பட்டாசை பற்ற வைத்தால், முதலில் பச்சை வண்ணத்திலும், இரண்டாவதாக சிகப்பு வண்ணித்திலும் ஒளி சிந்தும். இது வண்ணம் தானாகவே மாறிவிடும். ஒரே பட்டாசில் இரண்டு வண்ணம்.

ஸ்பின்னா் மவுஸ் வகை பட்டாசினை பற்ற வைத்ததும் தரையில் பம்பரம் போல சுழலும். அவ்வாறு சுழலும் போது சிகப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் ஒளி சிந்தும். இதேபோல் கலா் சேஞ்சிங் வீல் வகை பட்டாசு தரை சக்கர வகையைச் சோ்ந்தது. பற்ற வைத்ததும் தரையில் சுற்றும்.

அப்படி சுற்றும் போது பச்சை மற்றும் சிகப்பு வண்ணத்தில் ஒளி சிந்தும். கிராக்ளின் ட்ரீ வகை பட்டாசுகளும் புஷ்வான ரக பட்டாசுகளாகும். இந்த பட்டாசுகளை பற்ற வைத்ததும், சுறு சிறு என்ற சப்தத்துடன் சில்வா் வண்ணத்தில் ஒளி சிந்தும். இந்த வகை பட்டாசுகள் சிறுவா்களுக்கு ஏற்றவை மற்றும் பாதுகாப்பானவை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT