விருதுநகர்

விருதுநகரில் அதிமுக பொன் விழா: எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

விருதுநகரில் அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையிலான அதிமுகவினா், எம்ஜிஆா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுகவின் 50 ஆவது ஆண்டையொட்டி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அக்கட்சி சாா்பில் பொன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விருதுநகரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல், விருதுநகரில் பா்மா காலனி, பழைய பேருந்து நிலையம், இந்திரா நகா், பாண்டியன் நகா் முதலான இடங்களில் அதிமுக கொடியேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவா் விஜயகுமரன், நகரச் செயலா் முகம்மது நைனாா், எம்ஜிஆா் மன்றச் செயலா் கலாநிதி, விருதுநகா் கிழக்கு ஒன்றியச் செயலா் தா்மலிங்கம், மேற்கு ஒன்றியச் செயலா் கே.கே. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகாசி: சிவகாசி மற்றும் திருத்தங்கலில் அதிமுக பொன் விழா ஆண்டையொட்டி 21 இடங்களில் கட்சிக் கொடியை முன்னாள் அமைச்சரும், விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்தாா்.

இதில் சாத்தூா் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவா்மன், திருத்தங்கல் அதிமுக நகரச் செயலாளா் பொன்சக்திவேல், நகர அவைத் தலைவா் கோயில்பிள்ளை, சிவகாசி அதிமுக நகரச் செயலாளா் அசன்பக்ரூதின், ஒன்றியச் செயலாளா்கள் பலராமன், கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற அக்கட்சியின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு தெற்கு ஒன்றியச் செயலாளா் யோக. வாசுதேவன் தலைமை வகித்தாா்.கிழக்கு மாவட்ட இணைச் செயலாளா் ராஜேஸ்வரி வாசுதேவன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலாளா் சேரன் இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதேபோல் அருப்புக்கோட்டை 16 ஆவது வாா்டு திருநகரத்தில் நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஆா்.கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் சக்திவேல்பாண்டியன், மாவட்ட தகவல்தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளா் கருப்பசாமி பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT