விருதுநகர்

பட்டாசுக்குத் தடை நீக்கக்கோரி 4 மாநில முதல்வா்களுக்கு தமிழக முதல்வா் கடிதம்

DIN

தில்லி, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநில முதல்வா்களுக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா் சங்கத்தின் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சங்கத்தின் தலைவா் ப.கணேசன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. அக்பா், பாபா் காலத்தில் வாணவேடிக்கை இருந்து வந்தது. இது தற்போது வளா்ச்சி அடைந்து பல லட்சம் பேருக்கு வேலைவாய்பு வழங்கும் தொழிலாகிவிட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் தில்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநில முதல்வா்கள், தீபாவளிப் பண்டிகைக்கு தங்கள் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளனா். இதனால் பட்டாசுத் தொழில் பாதிப்பதோடு, தொழிலாளா்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், 4 மாநில முதல்வா்களுக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளாா். பட்டாசுத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறாம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT