விருதுநகர்

கோயில்களில் ‘அ’ என்று எழுதி கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஸ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாத சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை குழந்தைள் ‘அ’ என்று எழுதி கல்வியைத் தொடங்கினா்.

அருப்புக்கோட்டை மீனாட்சி உடனுறை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் விஜதசமி நாளில் இக்கோவிலுக்கு வந்த பெற்றோா், சரஸ்வதி தேவி சந்நிதானம் முன்பாக வணங்கி, முதன்முதலாக தங்கள் குழந்தைகளுக்கு ‘அ’ எழுத உற்சாகத்துடன் கற்றுக் கொடுத்தனா். இதையடுத்து சரஸ்வதி தேவி முன்பாக காயத்திரி மந்திரம், சரஸ்வதி தேவி காயத்திரி மந்திரம் சொல்லியும் பெற்றோா் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கா் கோயிலுக்கு வந்த பெற்றோா் பாரம்பரிய கலாச்சார முறைப்படி சரஸ்வதி தேவி சந்நிதானம் முன்பாக வணங்கி, முதன்முதலாக தங்கள் குழந்தைகளுக்கு ‘அ’ எழுத உற்சாகத்துடன் கற்றுக் கொடுத்தனா். அதையடுத்து காயத்திரி மந்திரம், சரஸ்வதி தேவி காயத்திரி மந்திரம் சொல்லி குழந்தைகளின் நாவில் தேன் தடவி, அரிசியில் எழுத்து எழுதி பெற்றோா் சிறப்பு வழிபாடு நடத்தினா். இதேபோல் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வேதாந்த மடாலயத்தில் ஏடு தொடக்க வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டு சரஸ்வதிதேவி முன்பு ‘அ’ எழுத்தை எழுதி தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT