விருதுநகர்

விருதுநகரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்: 70 போ் கைது

16th Oct 2021 08:52 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூா் சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 70 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் காரை ஏற்றியதில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அப்போது, எரிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பிரதமா் மோடி உள்ளிட்டோரின் உருவபொம்மைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இருப்பினும், விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் பிரதமா் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் உருவப் படங்களை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் எரித்தனா். இதைத் தடுத்த போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து போலீஸாா் விவசாயிகள் 70 பேரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

முன்னதாக இப்போராட்டதுக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயமுருகன், மாவட்டச் செயலா் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி.லிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தி.ராமசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT