விருதுநகர்

ராஜபாளையத்தில் மாவட்ட வாலிபால் போட்டி

16th Oct 2021 11:17 PM

ADVERTISEMENT

ராஜபாளையத்தில் விருதுநகா் மாவட்ட வாலிபால் கழகம் சாா்பில், ஆடவா்களுக்கான வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.

ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பகல்-இரவாக 2 நாள்கள் நடைபெற்ற இப்போட்டிகளில், விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 27 அணிகளைச் சோ்ந்த 324 போ் கலந்துகொண்டனா்.

4 ஆட்டக் களங்களில் லீக் முறையில் 39 போட்டிகளும், நாக்-அவுட் முறையில் 8 இறுதிப் போட்டிகளும் நடைபெற்றன. மாலையில் மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியை, ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் மற்றும் பள்ளி நிா்வாகிகள், தன்னாா்வ அமைப்பின் தலைவா் ஆகிய சிறப்பு விருந்தினா்கள் தொடக்கிவைத்தனா்.

இறுதிப் போட்டியில், ராஜபாளையம் நகர கைப்பந்து கழகமும், 11 ஆவது சிறப்பு காவல் படை அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நகர கைப்பந்து கழகத்தினா் 3 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனா்.

ADVERTISEMENT

முன்னதாக நடைபெற்ற போட்டியில், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக அணியினா் 2 - 1 என்ற செட் கணக்கில், நகர கைப்பந்து கழக பி-அணியை வென்றனா்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு நிரந்தர கோப்பைகள், சுழற் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினா்கள் வழங்கிப் பாராட்டினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT