விருதுநகர்

தடையை மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சி: 3 போ் மீது வழக்கு

16th Oct 2021 08:48 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே தடையை மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே எம்.ராமசந்திராபுரத்தில் உள்ள கலங்காண்டியம்மன் கோயில் திருவிழா நடத்த போலீஸாா் அனுமதி மறுத்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தடையை மீறி திருவிழாவுக்காக, அந்த கிராம கலையரங்கில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து புதுப்பட்டி போலீஸாா் அதே ஊரைச் சோ்ந்த முத்துமாரி(45) ஜெயக்கொடி(43), அசோக்(37) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT