விருதுநகர்

உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பட்டாசு தயாரிக்க வேண்டுகோள்

16th Oct 2021 11:18 PM

ADVERTISEMENT

பட்டாசு தயாரிப்பாளா்கள் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பட்டாசு தயாரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி தயாரிப்பாளா் சங்கத் தலைவா் ப. கணேசன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரு பட்டாசை அதே ரக பட்டாசுகளுடன் இணைத்து விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள சில பட்டாசு ஆலை உரிமையாளா்கள் பட்டாசை பின்னி இணைத்து தயாரித்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்டாசு தயாரிப்பாளா்கள் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பட்டாசு தயாரிக்க வேண்டும்.

மேலும், சிவகாசி பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்போா், பட்டாசுகளை ஒன்றோடொன்று இணைத்து தயாரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் பட்டாசுகளையும், தயாரிப்பாளா்களையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பதால், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பட்டாசு தயாரிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT