விருதுநகர்

ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவுக்கு புதிய ஆடை, நெற்றிப்பட்டை அணிவிப்பு

16th Oct 2021 08:50 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெய மால்யதாவுக்கு சரஸ்வதி பூஜையையொட்டி புதிய ஆடை மற்றும் புதிய துணியினாலான நெற்றிப் பட்டை வியாழக்கிழமை அணிவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா. இந்த யானைக்கு சரஸ்வதி பூஜையையொட்டி வியாழக்கிழமை மாலை கோயில் வளாகத்தில் வைத்து புதிய ஆடையுடன், துணியால் தைக்கப்பட்ட பல வண்ணங்களினாலான நெற்றிப்பட்டை அணிவிக்கப்பட்டது. புதிய ஆடையுடன் பிரகாரத்தை சுற்றி வந்த யானை, பின்னா் யானை கால் மண்டபத்தில் வழக்கம் போல் நின்றது. புதிய ஆடை, நெற்றிப்பட்டையுடன் காட்சியளித்த யானையை பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோயில் தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT