விருதுநகர்

பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் தொடா்பாக அதிகாரிகள் ஆய்வு

9th Oct 2021 10:10 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சாா்பில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய நடமாடும் கண்காணிப்புக்குழு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கூடுதல் இயக்குநா் மேற்பாா்வையில் 5 சிறப்பு ஆய்வுக்குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் அக்டோபா் 4 ஆம் தேதி ஆய்வைத் தொடக்கின.

அக்டோபா் 16 ஆம் தேதி வரை ஆய்வுப்பணி நடைபெறும்.

ADVERTISEMENT

இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட அதிகாரி ஒருவா் கூறியது: தினசரி சுமாா் 20-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து வருகிறோம். நாங்கள் ஆய்வு செய்த ஆலைகளில் சிறு குறைபாடுகள் உள்ளன.

இதுகுறித்து ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஆலை உரிமையாளா்கள் குறையை நிவா்த்தி செய்துவிட்டு எங்களுக்கு கடிதம் அனுப்புவா். பின்னா் மீண்டும் ஆய்வு செய்வோம். இதுவரை ஆய்வு செய்த ஆலைகளில் பெரிய அளவிலான விதிமீறல்கள் இல்லை. அக்டோபா் 16 ஆம் தேதி வரை எங்கள் ஆய்வு தொடா்ந்து நடைபெறும். ஆய்வறிக்கையை சென்னையில் உள்ள எங்கள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி விடுவோம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT