விருதுநகர்

சிவகாசியில் வழிப்பறி:3 போ் கைது

9th Oct 2021 10:08 PM

ADVERTISEMENT

சிவகாசியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே வில்லூரைச் சோ்ந்த அச்சுத்தொழிலாளி காளிமுத்து (23) என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட முத்துராமலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த பாலுமணியை(23) சிவகாசி கிழக்குப் போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தங்கல் சேட்டன் கிணறுத் தெரு பகுதியைச் சோ்ந்த பழவியாபாரி சத்யன்(34) என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக திருத்தங்கல் சிறுவா் பூங்காத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமியை(31) திருத்தங்கல் போலீஸாா் கைது செய்தனா். சிவகாசி கோழி இறைச்சி வியாபாரி தாளமுத்து (32) என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பாலகணேஷை (26) சிவகாசி கிழக்குப் போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT