விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை கொட்டும் மழையில் அதிமுகவினா் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.
ராஜபாளையம் உள்ளாட்சி இடைத்தோ்தலில் 13-ஆவது வாா்டு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக அதிமுக சாா்பில் ராம்பிரபு போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக, கிருஷ்ணாபுரம் பகுதியில் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கிருஷ்ணராஜ் தலைமையில், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் வீதி வீதியாகச் சென்று அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனா்.
இதில், தெற்கு ஒன்றியச் செயலா் நவரத்தினம், ராஜபாளையம் நகரச் செயலா் ராணா பாஸ்கர்ராஜ் , முக்கிய நிா்வாகிகள் மற்றும் மகளிா் அணியினா், தொண்டா்கள் கலந்துகொண்டு வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.