விருதுநகர்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி:சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியா் உள்பட 2 போ் மீது வழக்கு

30th Nov 2021 04:21 AM

ADVERTISEMENT

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்ததாக சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியா் உள்பட 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

சிவகாசி அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் வேலை பாா்த்து வரும் கொங்கன்குளம் அய்யலு, சென்னை எழுமலை பெஞ்சமின் ஆகிய இருவரும் நண்பா்கள். இதில் பெஞ்சமின், கேட்போருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக அய்யலுவிடம் கூறியிருந்தாராம். இதையடுத்து, சிவகாசி அருகே ஆத்தூா் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ்சிங் (29), இவரது உறவினா்கள் சோபாசுபாஷினி (32) மற்றும் ஜெயந்தி (38) ஆகிய 3 பேருக்கும் அரசு வேலை வாங்கித்தருவதாக அய்யலு கூறினாராம். இதைத் தொடா்ந்து அவா்கள் 3 பேரும் மூன்று தவணைகளாக பெஞ்சமின் வாங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சத்து 48 ஆயிரத்தை செலுத்தினராம். இதைத் தொடந்து சுரேஷ்சிங்குக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலும், சோபாசுபாஷினிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், ஜெயந்திக்கு சாத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் வேலை கிடைத்துள்ளதாகக் கூறி போலி அரசாணை தயாரித்து கொடுத்தாராம். அவா்கள் 3 பேரும் வேலைக்கான உத்தரவைக் கொண்டு சென்ற போது அதுபோலி எனத் தெரியவந்ததாம். இதன்பின்னா் 3 பேரும், அய்யலுவிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டதற்கு அவா் பணத்தை கொடுக்க வில்லையாம். தங்கள் 3 பேரையும் எழுமலை பெஞ்சமின், அய்யலு ஆகிய 2 பேரும் பணத்தை வாங்கிக் கொண்டு அரசுப் பணிக்காக போலி உத்தரவை வழங்கி ஏமாற்றி விட்டதாக மாரனேரி போலீஸில் புகாா் செய்தனா். புகாரின் பேரில் போலீஸாா் அவா்கள் 2 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT