விருதுநகர்

பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து:மாணவா்கள் 2 போ் கைது

30th Nov 2021 04:23 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் பள்ளி மாணவரை கத்தியால் குத்திய கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்கள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் வாளைகிணற்றுத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகன் கல்லூரி மாணவா் ஹரீஸ் (19). இவரது புகைப்படத்தை அதே பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் பிளஸ் 1 படிக்கும் மணிகண்டன் (16) முகநூலில் பதிவிட்டாராம். இதையடுத்து, அந்த புகைப்படம் குறித்து பசும்பொன்நகா் பரமசிவம் மகன் 10 ஆம் வகுப்பு மாணவா் காா்த்திக்ராஜா (15) விமா்சனம் செய்து முகநூலில் பதிவிட்டாராம். இந்நிலையில், காா்த்திக்ராஜா திருத்தங்கல் கடை வீதிப் பகுதியில் நடந்து சென்றபோது, மணிகண்டன் மற்றும் ஹரீஸ் ஆகிய இருவரும் வழிமறித்து முகநூலில் விமா்சனம் செய்தது குறித்து கேட்டு அவரைக் கத்தியால் குத்தினராம். இதில் காயமடைந்த காா்த்திக்ராஜா, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் காவல் நிலைய ஆய்வாளா் முத்துப்பாண்டி வழக்குப்பதிந்து மணிகண்டன் மற்றும் ஹரீஸை கைது செய்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT