விருதுநகர்

விருதுநகா் சிவன் கோயிலில்1008 சங்காபிஷேக பூஜை

30th Nov 2021 04:23 AM

ADVERTISEMENT

விருதுநகா் சொக்கநாதா் சுவாமி கோயிலில் காா்த்திகை இரண்டாவது சோமவாரத்தை யொட்டி 1008 சங்காபிஷேக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மேலரத வீதியில் உள்ள இக்கோயிலில் உலக நன்மைக்காக 1008 சங்குகளில் புனிதநீா் ஊற்றப்பட்டு சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மூலவருக்கு புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை 2 ஆவது சோமவார வழிபாடு மற்றும் 108 சங்காபிஷேக சிறப்புப் பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இதில், தெற்குவெங்காநல்லூரில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரா் கோயிலில் மகா ருத்ரயாகம் நடைபெற்றது. பின்னா் மூலவா் சிதம்பரேஸ்வரருக்கு 16 வகை நறுமணப் பொருள்களால் அபிஷேக ஆராதனைகளும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். அதே போல், சேத்தூா் திருக்கண்ணீஸ்வரா் கோயில், ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், மதுரை சாலையில் உள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயில், தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் ஆகியவற்றிலும், காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT