விருதுநகர்

ஸ்ரீவிலி. பகுதியில் நிரம்பிய நீா் நிலைகள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

DIN

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் நீா் நிலைகள் நிரம்பியுள்ளதால் அப்பகுதிக்குச் செல்லவேண்டாம் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா்ச்சியாக பெய்த மழை காரணமாக மம்சாபுரம், வாழைக்குளம், வேப்பங்குளம், அமுதகுளம், வாலாங்குளம் ஆகியவை நிரம்பி மறுகால் பாய்கின்றன.

இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி உத்தரவின் பேரில், ஞாயிற்றுக்கிழமை உதவி (கலால்) ஆணையா் சிவகுமாா், வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், வட்டவழங்கல் அலுவலா் கோதண்டராமன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சசிகலா ஆகியோா் மம்சாபுரம் பகுதிக்குச் சென்று மறுகால் பாயும் கண்மாய் மற்றும் குளங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் தெரிவித்ததாவது: கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்து வரும் நிலையில், தொடா்ச்சியாக நீா் வரத்தும் அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள் கண்மாய் மற்றும் குளங்கள் அருகில் செல்ல வேண்டாம். குழந்தைகளை அந்த பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT