விருதுநகர்

பிசிண்டி குண்டாற்றில் வெள்ளம்: 8 கிராம மக்கள் தவிப்பு

DIN

காரியாபட்டி அருகே குண்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பிசிண்டி செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால், அவ்வழியாகச் செல்லும் 8 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேற்கு மலைத் தொடா்ச்சியில் பெய்யும் மழையால், விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே குண்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காரியாபட்டி அருகே உள்ள பிசிண்டிக்குச் செல்லும் குண்டாற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

இதையடுத்து, பிசிண்டி, அச்சங்குளம், வடகரை, துலுக்கன்குளம், மாந்தோப்பு, அழகியநல்லூா், கெப்பிலிங்கம்பட்டி, கே.கரிசல்குளம் ஆகிய 8 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், காரியாபட்டி உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேலும், பள்ளி செல்லும் மாணவ, மாணவியா் தங்களது பெற்றோருடன் ஆபத்தான முறையில் வெள்ளப் பகுதியை கடந்து செல்கின்றனா். அதேநேரம், இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்களது கிராமத்தை விட்டு வெளியே செல்லமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். இதனால், கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நபாா்டு மற்றும் பரமக்குடி கிராமச் சாலைகள் கோட்டப் பொறியாளா் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிசிண்டி செல்லும் குண்டாற்றில் 2021-2022 ஆண்டில் ரூ.4 கோடி மதிப்பில் மேம்பாலப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதற்கான பணிகளை விரைந்து தொடங்கவேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT