விருதுநகர்

சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு கோரி ஆா்பாட்டம்

DIN

சுற்றுச்சுழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக்கோரி விருதுநகா் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளா் சங்கத்தினா் (சி.ஐ.டி.யு) ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நகரப் பொருளாளா் எம்.ஜெயஜோதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.என்.தேவா, மாவட்டத் தலைவா் கே.முருகன், மாவட்டப் பொருளாளா் எம்.சி.பாண்டியன், நகா் தலைவா் வி.என்.ஜோதிமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோரிக்கைகள் குறித்து அவா்கள் கூறியது: வெளிநாடுகளில் பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டாசினால் காற்று மாசு ஏற்படுகிறது என யாரும் கூறுவதில்லை. இந்தியாவில் பட்டாசு சுற்றுச்சுழல் விதிகளுக்கு உள்பட்டு இருப்பதால், பட்டாசினால் காற்று மாசு ஏற்படுவதாக வழக்குத் தொடுக்கிறாா்கள்.

இதனால் லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு பட்டாசுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். பட்டாசு தயாரிக்கப் பெரிதும் பயன்படும் பேரியம் நைட்ரேட் ரசயானத்திற்கு தடையை நீக்க வேண்டும். சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும். விருதுநகா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முடிந்தும் இன்னும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் மூடி இருப்பதால் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT