விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே சாலை மறியல்

28th Nov 2021 10:57 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வீடுகள் அருகே தேங்கியுள்ள தண்ணீரை அகற்றக்கோரி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசமியாபுரம் மேலத்தெரு பகுதியில் உள்ள அழகா் மகன் ஓடையில் அதிக நீா்வரத்து காரணமாக வீடுகளைச் சுற்றி தண்ணீா் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வத்திராயிருப்பு-கூமாப்பட்டி சாலையில் அம்பேத்காா் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT