விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே 2 பைக்குகள் மோதல்: இளைஞா் பலி; காவலா் காயம்

28th Nov 2021 10:55 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை இரவு 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் இளைஞா் பலியானாா். காவலா் பலத்த காயமடைந்தாா்.

திருச்சுழி வட்டம் சித்தலக்குண்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டித்துரை (39). அருப்புக்கோட்டை அருகே பரளச்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறாா். அருப்புக்கோட்டைக்கு வேலை நிமித்தமாக ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த காவலா் பாண்டித்துரை, மீண்டும் ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே நரிக்குடி என்.முக்குளத்தைச் சோ்ந்த ரவி என்பவரது மகன் சரவண சாஸ்தா (26), இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை நோக்கி வந்துள்ளாா்.

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில், இவ்விரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் காவல்துறையினா் மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி சரவண சாஸ்தா உயிரிழந்தாா். காவலா் பாண்டித்துரை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT