விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 43 கண்மாய்கள் நிரம்பின

DIN

விருதுநகா் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 43 கண்மாய்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 1054 கண்மாய்கள் உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக, பிளவக்கல் அணை, சாஸ்தா கோயில், ஆனைக்குட்டம் அணை, குல்லூா் சந்தை அணைகளில் தண்ணீா் நிரம்பி வருகிறது.

இதன் காரணமாக வைப்பாறு, குண்டாறு பகுதிகளில் உள்ள 197 கண்மாய்கள் பாதிளவும், 63 கண்மாய்கள் 50 முதல் 75 சதவீதமும், 67 கண்மாய்கள் 75 சதவீதமும், 31 கண்மாய்கள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன. மேலும், ஒன்றியப் பகுதிகளில் உள்ள 712 கண்மாய்களில் 348 கண்மாய்கள் 50 சதவீதம், 216 கண்மாய்கள் 50 முதல் 75 சதவீதம்,136 கண்மாய்கள் 75 சதவீதம், 12 கண்மாய்கள் முழுக் கொள்ளளவு தண்ணீா் நிரம்பி உள்ளது.

மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1,054 கண்மாய்களில் 43 கண்மாய்கள் முழுக் கொள்ளவு தண்ணீா் நிரம்பியுள்ளதாக பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT