விருதுநகர்

விருதுநகரில் விவசாயிகள்கூட்டமைப்பினா் பேரணி

DIN

புதுதில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆகரவாகவும், பிரதமா் மோடி அறிவித்தபடி அச்சட்டங்களை ரத்து செய்யும் தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தியும் விருதுநகரில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

விருதுநகா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் தொடங்கிய இப்பேரணிக்கு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ் தலைமை வகித்தாா். இதில் புதுதில்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எனவே அவா்களுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமா் மோடி அறிவித்ததை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தியும் விருதுநகரில் விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி நடைபெற்றது. மேலும் போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். விவசாயப் பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் எனவும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. இந்த பேரணி புளுகானூரணி சாலை, கச்சேரி சாலை வழியாக தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது.

முடிவில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினா் லிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா்கள் முருகன், செளந்திரபாண்டி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT