விருதுநகர்

சிவகாசியில் மத்திய அரசைக் கண்டித்து நடைப்பயணம்: காங்கிரஸ் எம்.பி. உள்பட 360 போ் கைது

25th Nov 2021 07:27 AM

ADVERTISEMENT

சிவகாசியில் புதன்கிழமை மத்திய அரசைக் கண்டித்து நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா், சிவகாசி எம்.எல்.ஏ. ஜி. அசோகன் மற்றும் காங்கிரஸ் கட்சியினா் என மொத்தம் 360 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெட்ரோல் மற்றும் அத்தியவாசியப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்தும், விலைவாசியை கட்டுப்படுத்த இயலாத மத்திய அரசைக் கண்டித்தும் சிவகாசி, சிவன் சன்னிதி முன்பு விருதுநகா் எம்.பி. ப. மாணிக்கம் தாகூா் , சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் மாட்டுவண்டியில் எரிவாயு உருளையை வைத்துக்கொண்டு சிறிது நேரம் போராட்டம் நடத்தினா். தொடந்து அவா்கள் மத்திய அரசைக் கண்டித்து நடைப்பயணம் செய்ய முன்றனா். அப்போது சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாபுபிரசாத் மற்றும் காவல் ஆய்வாளா் சுபகுமாா் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ராஜாசொக்கா் மற்றும் 281 பெண்கள் உள்பட 360 பேரை கைது செய்தனா்.

இதன் பின்னா் மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இதே காரணத்திற்காக விருதுநகரில் நடைப்பயணம் மெற்கொண்டபோது காவல்துறையினா் கைது செய்யவில்லை. சிவகாசியில் கைது செய்யப்பட்டிருக்கிறோம். பட்டாசு பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. நான் பட்டாசு பிரச்னை குறித்து மக்களவை கூட்டத்தில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வருவேன். மக்கள் பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி போராடும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT