விருதுநகர்

அருப்புக்கோட்டையில் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை

25th Nov 2021 07:29 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பல்வேறு உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த உடற்கல்வி ஆசிரியா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அருப்புக்கோட்டை பாண்டுரெங்கன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வீரையா மகன் ராமகிருஷ்ணன் (57). இவருக்கு மனைவி அனுசுயா (52), 2 மகன்கள் உள்ளனா். ராமகிருஷ்ணன் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்திலுள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அவா், மதிய உணவு இடைவேளையின்போது, தனக்காக பள்ளியில் ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று விட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த சக ஆசிரியா்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் அறை கதவை உடைத்து பாா்த்தபோது, உடற்கல்வி ஆசிரியா் ராமகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT