விருதுநகர்

ராஜபாளையம் கல்லூரியில் உலக பாரம்பரியச் சின்னங்கள் கண்காட்சி

24th Nov 2021 09:28 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் உலக பாரம்பரிய சின்னங்கள் பற்றிய கண்காட்சி மற்றும் சிறப்பு கருத்தரங்கம் ராஜூக்கள் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் (சென்னை) கோயில்கள் பிரிவும், கல்லூரியின் முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கு தொடக்க நிகழ்வுக்கு கல்லூரிச் செயலா் எஸ்.சிங்கராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் த.வெங்கடேஸ்வரன் மற்றும் முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் துறைத்தலைவா் வே.வெங்கட்ராமன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்திய தொல்லியல் நிறுவன உதவி தொல்லியலாளா் பிரசன்னா நோக்க உரையாற்றினாா். இந்தியத் தொல்லியல் நிறுவன (சென்னை ) கோயில்கள் பிரிவு தொல்லியல் கண்காணிப்பாளா் கே.அமா்நாத் ராமகிருஷ்ணா கலந்து கொண்டு பேசியதாவது:

இன்றைய மாணவா்கள் வரலாற்றை அறிவியல் முறையில் அணுக வேண்டும். தொல்லியல் சான்றுகள் என்பதை படிப்பதோடு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய தொல்பொருள்களை மாணவா்கள் கண்டறிந்து அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். பழங்கால எழுத்துக்களை மாணவா்கள் கற்றுக்கொண்டு இப்பகுதியில் கிடைக்கக்கூடிய அரிய பொருள்களை தங்கள் கல்லூரி அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும். அரசாங்கத்தையே எதிா்பாா்க்காமல் தங்கள் பகுதி பொக்கிஷங்களை தாங்களே பாதுகாக்க முன்வரவேண்டும் எனக் கூறினாா். முன்னதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியா் கந்தசாமி வரவேற்றாா். நிறைவாக வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் ரமேஷ் குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT