விருதுநகர்

ஆண்டாள் கோயிலுக்கு மத்திய பிரதேச முதல்வா் இன்று வருகை

24th Nov 2021 09:28 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா், ஆண்டாள் கோயிலிலுக்கு புதன்கிழமை மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ்சிங் சவுகான் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருகிறாா்.

காலை 9 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்ய வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டாள் கோயிலைச் சுற்றிலும் ஏற்கெனவே கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அதை கண்காணிக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். மேலும், கோயிலைச் சுற்றியும், முதல்வா் வரும் பாதைகளிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். முதல்வா் வருவதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன், காவல் ஆய்வாளா் கீதா ஆகியோா் செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆண்டாள் கோயில் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT