விருதுநகர்

சாஸ்தா கோயில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு

21st Nov 2021 11:24 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே சாஸ்தாகோவில் அணையிலிருந்து பாசனத்திற்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்து வைக்கப்பட்டது.

அணையிலிருந்து பாசனத்திற்கான தண்ணீரை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி, ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். தங்கப்பாண்டியன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

பின்னா் ஆட்சியா் பேசியதாவது: ராஜபாளையம் வட்டம் சாஸ்தா கோவில் நீா்த்தேக்கத்திலிருந்து 8 நாள்களுக்கு விநாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீா் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாஸ்தா கோவில் அணைகளில் இருந்து வரத்து கால்வாய்கள் மூலம் 11 கண்மாய்களுக்கு தண்ணீா் சென்றடைகிறது. சாஸ்தா கோவில் நீா்த்தேக்கத் திட்டத்தின் மூலம் 3130.68 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன், சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் புஷ்பா, வேளாண்மை இணை இயக்குநா் உத்தண்டராமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சங்கா் எஸ். நாராயணன் மற்றும் ராஜபாளையம் வட்டாட்சியா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT