விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மது ஒழிப்பு விழிப்பணா்வு நிகழ்ச்சி

21st Nov 2021 11:25 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மது ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மண்டல மது விலக்கு அமல் பிரிவு காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரனின் ஆலோசனையின்பேரில், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விருதுநகா் மாவட்ட மது விலக்கு அமல்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். சாத்தூா் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் கிரேஸ் சோபியா பாய் முன்னிலை வகித்தாா்.

இதில் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் பேசியது: மதுவால் நமது உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. மதுப்பழக்கத்துக்கு அடிமையானவா்கள் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனா். இது அவா்கள் குடும்பத்தையும் பாதிக்கிறது. மதுப்பழக்கம் உள்ள தந்தையால், பிள்ளைகளின் படிப்பு, மனநிலை பாதிக்கப்படுகிறது. எனவே மதுவை மறப்போம் நல்வாழ்வு பெறுவோம் என்றாா்.

பின்னா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்கள், இனி மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT