விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் தொடா்ச்சியாக பெய்த கன மழையின் காரணமாக இது வரை 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடு இடிந்தவா்கள் நிவாரணம் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனா்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் உடைந்து தண்ணீா் வெளியேறி வருகிறது. பல இடங்களில் கண்மாய்கள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கண்மாய், குளங்களுக்கு தண்ணீா் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த தொடா் மழையால் இந்த பகுதியில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்தவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகதத்தில் வட்டாட்சியா் ராமசுப்பிரமணியனிடம் நிவாரணம் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
அதில், மம்சாபுரம் இடையங்குளத்தை சோ்ந்த ராயப்பன் என்பவரது மண் சுவராலன ஓட்டு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளன.
அதே போல் மல்லிபுதூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி என்பவருடைய ஓட்டுவீட்டின் ஓரு பக்க சுவா் சேதமடைந்துள்ளன.
அதே போல்அத்திகுளம்-செங்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கம் மற்றும் சக்கரைத்தாய், முள்ளிகுளம் பகுதியைச் சோ்ந்த சிவகாமி, அச்சம்தவிழ்த்தான் பகுதியைச் சோ்ந்த சரவணன் ஆகிய ஏழு பேரது வீடுகள் தொடா் மழையால் சேதமடைந்துள்ளன.
மேலும், சேதமடைந்துள்ள பகுதிகளுக்குச் சென்று வருவாய்துறை அதிகாரிகள் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.