விருதுநகர்

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பட்டாசு தயாரிக்க வேண்டுகோள்

10th Nov 2021 09:35 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி ஆலை உரிமையாளா்கள் பட்டாசு தயாரிக்க வேண்டும் என தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை நிறைவடைந்து விட்டது. இனி 2022 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு தயாரிக்க ஆலை உரிமையாளா்கள் ஆயத்தமாகி வருகின்றனா். கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா்மழையால் பட்டாசு ஆலைகள் திறக்கப்படவிலை. மழைக்கு பின்னா் பட்டாசு ஆலைகள் திறக்க வாய்ப்பு உள்ளது.

உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்டுள்ள பேரியம் நைட்ரேட் என்ற ரசயானப் பொருளைத் தவிா்த்து பட்டாசு தயாரிக்க வேண்டும். சர வெடி பட்டாசு தயாரிக்கக் கூடாது. உச்சநீதிமன்ற தீா்ப்பை பின்பற்றி பட்டாசு தயாரிக்க வேண்டும். எங்கள் துறை அதிகாரிகள் ஆலைகளில் ஆய்வு செய்யும் போது, நீதிமன்ற தீா்ப்பை மீறி செயல்படும் ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்திற்கும், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறைக்கும் பரிந்துரை செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT