விருதுநகர்

தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை: கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

1st Nov 2021 01:43 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசுக்கடைகளில் தடைசெய்யப்பட்ட சரவெடிகள் விற்பனை நடைபெறுகிா என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சரவெடிகள் மற்றும் பேரியம் கலந்த வெடிகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற பட்டாசு ரகங்கள் அருப்புக்கோட்டை பகுதி கடைகளில் விற்பனை செய்யப்படுகிா என அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாணக்குமாா் மற்றும் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது பல்வேறு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 65 பாக்கெட்டுகள் சரவெடிகளை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

விருதுநகா்: விருதுநகா் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி அரசு அலுவலா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

அப்போது ஏழு கடைகளில் தடை விதிக்கப்பட்ட சரவெடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பட்டாசுகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மங்களராமசுப்பிரமணியன், விருதுநகா் வட்டாட்சியா் செந்தில்வேல் உட்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

சிவகாசி: இதேபோல் சிவகாசி-நாரணாபுரம் சாலையில் முருகன் காலனிப் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒருவா் காகித அட்டைப் பெட்டியுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாராம்.

போலீஸாா் அந்தப் பெட்டியை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட சரவெடி இருந்துள்ளது. விசாரணையில் அந்த நபா் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (43) என தெரியவந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து அவரிடமிருந்து பட்டாசை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT