விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் காலை 7 மணிவரை மிதமான மழை பெய்தது.
இதனால் விதைப்புமுடிந்து பயிா்வளரக்காத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிமுதலாக மிதமான மழை தொடா்ந்து காலை 7 மணிவரை பெய்தது.
அதிகம் காற்றுவீசாமல், இடிமின்னலின்றிப் பெய்த இம்மழையால் நகரிலுள்ள பெரியகண்மாய், தூம்பைக்குளம் கண்மாய், செவல்கண்மாய், செங்காட்டூருணி, கம்மவாா் சிறுகண்மாய் உள்ளிட்ட பலநீா்நிலைகளுக்கும் நீா்வரத்து ஏற்பட்டு,பாதிக்குமேற்பட்ட அளவில் நீா்நிரம்பியது.
இம்மழையால் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாகக்குறைந்து உழவா்சந்தை, மற்றும் காய்கறி,பூச்சந்தைகளில் வியாபாரம் பாதிப்படைந்தது.தொடா்ந்து கடந்த 3 நாட்களாக அதிகாலையில் பெய்துவரும் மழையால் வெப்பம் பெருமளவில் தணிந்து குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது.