விருதுநகர்

சாத்தூரில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவு தினம்

1st Nov 2021 01:40 AM

ADVERTISEMENT

சாத்தூரில் நகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 37 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியையொட்டி சாத்தூா் வடக்கு ரத வீதியில் அமைக்கபட்டிருந்த இந்திராகாந்தியின் உருவப் படத்திற்கு காங்கிரஸ் கமிட்டி நகரத் தலைவா் டி.எஸ். ஐயப்பன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அனைவரும் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில் கட்சியின் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ஜோதி நிவாஸ், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT