சிவகாசி: சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிலாளா்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
சிவகாசிப் பகுதியில் பட்டாசு , தீப்பெட்டி, அச்சுத்தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புத் தொழிலாளா்களுக்கும், சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கலுக்கும், தீபாவளி பண்டிகைக்கும் ஆண்டுக்கு இருமுறை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கடந்த சில நாள்களாக சிவகாசிப் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்ததால் பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சிவகாசிப் பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளா்களுக்கும் தீபாவளி பண்டிகை போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.