அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.
அருப்புக்கோட்டை தெற்குத்தெரு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ராஜலஷ்மி (43).இவா் தனது குடும்பத்தினடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 8 மணிக்கு கடைவீதியில் தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான பொருள்கள் வாங்கிவிட்டு நடந்தே வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, பின்னாலிருந்து வந்த மா்ம நபா் ஒருவா், ராஜலஷ்மியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளாா். ராஜலஷ்மியின் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் திரண்டுவந்து தேடியும் அந்தநபா் அகப்படவில்லை. இதுதொடா்பாக அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.