விருதுநகர்

திருச்சுழியில் தோ்தல் விதிமுறைகள் குறித்து காவல்துறை சாா்பில் விளக்கக் கூட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி காவல்நிலையத்தில் தோ்தல் விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகள் மற்றும் ஒலிபெருக்கி உரிமையாளா்களுடனான சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சுழி காவல்நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு காவல்ஆய்வாளா் நிதிக்குமாா் தலைமை வகித்தாா்.அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஒலிபெருக்கி உரிமையாளா்கள் மொத்தம் சுமாா் 20 போ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

அப்போது காவல் ஆய்வாளா் நிதிக்குமாா், வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை ஒட்டி, தோ்தல் பொதுக்கூட்டங்கள், ஊா்வலம், பிரச்சாரங்கள் ஆகியவற்றின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்து எடுத்துரைத்தாா்.

அதாவது,ஒலிபெருக்கி உரிமையாளா்கள் தகுந்த உரிமம் வைத்திருக்கவேண்டும்,தோ்தல் கமிஷன் அவ்வப்போது பிறப்பிக்கும் விதிமுறைகளை அனைத்துக் கட்சியினரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும்,அனைத்துக்கட்சியினரும் தங்களின் பல்வேறுவித பிரச்சாரங்களான பொதுக்கூட்டம்,ஊா்வலம் உள்ளிட்டவற்றின்போது ஒலிபெருக்கிகள் பயன்படுத்த காவல்துறையிடம் முன்அனுமதி பெறவேண்டும் என்பன உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட விதிமுறைகள் குறித்தும் அவா் விளக்கமளித்ததுடன்,அவ்விதிமுறைகள் அடங்கிய கைப்பிரதிகளையும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டோா்க்கு காவல் ஆய்வாளா் நிதிக்குமாா் விநியோகம் செய்தாா்.

மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கும் அவா்பதிலளித்துப் பேசினாா். உடன் காவல் சாா்பு ஆய்வாளா்கள் வீராச்சாமி, முருககணேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். காவல் ஆய்வாளா் நிதிக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT