விருதுநகர்

விருதுநகர்: விதியை மீறி செயல்பட்ட 11 பட்டாசு ஆலைகளுக்கு சீல்

4th Mar 2021 07:23 PM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டத்தில் விதியை மீறி செயல்பட்ட 11 பட்டாசு ஆலைகளுக்கு வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
இதுகுறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; கடந்த பிப்ரவரி மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நான்கு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். 
பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விதியை மீறி செயல்படக் கூடாது என பலமுறை அறிவுறுத்தப்படும் விபத்து ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. 
விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் சுமார் 800க்கு மேல் உள்ளது. இந்த ஆலைகளை ஆய்வு செய்ய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல பட்டாசு ஆலை ஆய்வு செய்தது. 
இதில் மரத்தடியில் பட்டாசு தயார் செய்தது அளவுக்கு அதிகமாக மருந்து இருப்பு வைத்திருந்தது விதியை மீறி பட்டாசு தயாரிக்கும் அறையில் அளவுக்கு அதிகமாக பணியாளர்களை பணியாளர்களை கொண்டு வேலை செய்தது உள்ளிட்ட பல விதிமீறல்கள் இருந்த 11 ஆலைகளுக்கு அக்குழுவினர் சீல் வைத்தனர். மேலும் தொடர்ந்து ஆய்வு நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : cracker factories
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT